கிட்டத்தட்ட 20 தடவ இது எனக்கு நடந்து இருக்கு..,விஜய் டிவி பிரியங்காவின் பதிலால் ரசிகர்கள் ஷாக்!!

0
விஜய் டிவி பிரியங்காவின் பதிலால் ரசிகர்கள் ஷாக்!!
விஜய் டிவி பிரியங்காவின் பதிலால் ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா, பிக்பாஸில் தனக்கு நடந்த ஒன்றை பற்றி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பிரியங்கா வெளிப்படை :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ராஜு வீட்ல பார்ட்டி. பிக்பாஸ் 5 ல் டைட்டில் வின்னரான ராஜு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் இயக்குனர் வெங்கட் பிரபு, வைபவ், பத்மபிரியா உள்ளிட்ட அவரது குழுவினர் கலந்து கொண்டனர். தங்கள் பட நிகழ்வுகள் மற்றும் ஷூட்டிங் குறித்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக விஜய் டிவி பிரியங்கா தொடர்ந்து வாராவாரம் பங்கேற்று வருகிறார். இதையடுத்து, நடிகர் வைபவ் நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது எத்தனை முறை அழுதீர்கள் என சிரித்து கொண்டே கேட்டார். 23 க்கும் மேற்பட்ட முறைகள் நீங்கள் அழுதிருப்பீர்கள் என அவரே பதிலையும் சொன்னார். ஆனால், அவ்வளவு முறையெல்லாம் தான் அழவில்லை.

தோராயமாக 20 முறை வரை நான் அழுதிருப்பேன் என காமெடியாக சிரித்து கொண்டே பிரியங்காவும் பதிலளித்தார். பிரியங்கா பிக்பாஸில் 2வது இடத்தை பிடித்திருந்தாலும், தொடர்ந்து இந்த நிகழ்ச்சி பற்றிய இவர் மீதான விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here