இனிமேல் இவரு தான் என்னோட உலகமே.., சந்தோசத்தின் உச்சத்தில் குதிக்கும் விஜய் டிவி பிரியங்கா!!

0
இனிமேல் இவரு தான் என்னோட உலகமே.., சந்தோசத்தின் உச்சத்தில் குதிக்கும் விஜய் டிவி பிரியங்கா!!
இனிமேல் இவரு தான் என்னோட உலகமே.., சந்தோசத்தின் உச்சத்தில் குதிக்கும் விஜய் டிவி பிரியங்கா!!

விஜய் டிவியில தொகுப்பாளினியா தன்னோட வேலையை சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கவங்க தான் பிரியங்கா. பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுக்கு அப்பறம் அவங்க ரேஞ்சே மாறிடுச்சு. இப்போ ரசிகர்கள் மத்தியில நிரந்தரமான இடத்தை பிடிச்சிட்டாங்கனு தான் சொல்லணும்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன ஷோவை தொகுத்து வழங்கிட்டு வந்தவங்களுக்கு அவங்களோட திறமையை பார்த்து அடுத்தடுத்து சான்ஸ் கெடச்சுச்சு. ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி பிரியங்காவால் தான் சூப்பர் ஹிட் அடித்தது. பிரியங்காவின் வெற்றியை பற்றி பேசினால் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் ப்ரியங்காவின் பெர்சனல் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது. அதாவது சூப்பர் சிங்கர் ஷோவில் பணியாற்றிய பிரவீன் என்பவரை தான் பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். ஆனால் கொஞ்ச காலமாகவே பிரியங்கா கணவரை பற்றி மூச்சு கூட விடவில்லை.

பிக் பாஸ் வீட்டிலும் அவரை பார்ப்பதற்காக அம்மாவும், தம்பியும் மட்டும் தான் வந்திருந்தனர். இப்படி இருக்க இப்பொழுது பிரியங்கா இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சமீபத்தில் தான் அவரது தம்பிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தை தான் தனக்கு உலகம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here