பிரியங்கா சோப்ரா வாழ்க்கையில இவ்வளவு சோகமா?? வைரலாகும் வீடியோ!!

0

பிரபல அமெரிக்க தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேயின் ஷோவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது சினிமா வாழ்க்கை, திருமண வாழ்க்கை பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா தன்னை விட குறைந்த வயதுடைய அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக அறியப்படும் நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது இரண்டாவது திரைப்படமாக அமைந்தது நடிகர் விஜய்யுடன் பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘தமிழன்’ திரைப்படம். அன்று முதல் இன்று வரை திரையுலகின் வெற்றிப்பட நடிகையாக இருந்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசித்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

மணிரத்னம் படத்தில் ‘குக் வித் கோமாளி’ அஷ்வினா?? வைரலாகும் புகைப்படம்!!

அப்போது பேசிய அவர் தனது சினிமா வாழ்க்கை பற்றியும், திருமணம் பற்றியும் மனம் திறந்துள்ளார். பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி நடனங்கள் தவிர்க்க முடியாதது. பாலிவுட் சினிமாவில் நடித்து வந்த ஆரம்ப கால கட்டங்களில் அரைகுறை ஆடையுடன் நடிக்க சொல்லி இயக்குனர் ஒருவர் என்னை வற்புறுத்தினார் என்று அவருக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

கடவுள் பக்தி அதிகமாக உள்ள பெண் நான். எனது அப்பா இறந்ததும் கடவுள் பக்தி எனக்கு அற்றுப்போனது. ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டெடுத்தது கடவுள் தான். என் கணவர் நிக் ஜோனஸ் எல்லா வகையிலும் எனக்கு துணையாக இருந்து வருகிறார். என் கனவுகளுக்கு ஊக்கமளிப்பவராக இருக்கிறார். என் அம்மாவுக்கு ஏற்ற நல்ல மருமகன் நிக் ஜோனஸ் தான் என பேசியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here