ஸ்கூல் யூனிபார்மில் பிரியா பவானி ஷங்கர் எப்படி இருக்காங்கனு பாருங்களே – லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

0
priya bavani shanker

சின்னத்திரை நடிகையாக இருந்து தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்து வருபவர் தான் பிரியா பவானி ஷங்கர். தற்போது அவரது பள்ளி வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா பவானி ஷங்கர்

பிரபல சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை ஆரம்பித்தவர் தான் பிரியா பவானி ஷங்கர். ஆனால் அவரது விடா முயற்சியால் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலால் மக்கள் மத்தியில் அவருக்கென்று தனி வரவேற்பு கிடைத்தது.

அவருக்காக தான் அந்த சீரியலை பார்க்கவே செய்தனர். அதன் பிறகு சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இதனால் அவருக்கு கல்யாணம் என்ற புரளியை வேறு பரப்பி வந்தனர். கடைசியில் பார்த்தால் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவும் தான் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேயாத மான் படம் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழை தாண்டி தெலுங்கு படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் ப்ரியா. தெலுங்கில் அவர் நடித்து வரும் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.

3வது முறையாக முதல்வராகிறார் மம்தா பானர்ஜி – மே 5ல் பதவி ஏற்பு!!

மேலும் இவர் பல கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். மேலும் கவர்ச்சி கடலிலும் இறங்கியுள்ளார் பிரியா. இந்நிலையில் அவரது சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ப்ரியா குட்டி என்றும் கொஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here