தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனம் – மத்திய அரசு திட்டவட்டம்!!

0

தற்போது இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனங்களை இறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி:

கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி வருகிறது. தற்போது தான் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனால் எந்த நாடும் கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அடுத்த கட்டமாக இந்தியாவில் 50 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தயாராகி வருகிறது. இதற்காக தற்போது முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கு சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

‘கோவை மெட்ரோ முதல் துறை மேம்பாடுகள் நிதி ஒதுக்கீடு வரை’ – இடைக்கால பட்ஜெட் முழு விபரம்!!

தற்போது தடுப்பூசி விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது. தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 50 வயதிற்கு அதிகமானவர்களுக்கு தனியார் மருத்துவமனை மூலம் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here