முகக்கவசம் அணியாதவர்களை உடனே வெளியேற்றுங்கள் – தமிழக சுகாதாரத்துறை அதிரடி!!

0

முகக்கவசம் அணியாத பணியாளர்களை அலுவலகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

முகக்கவசம் கட்டாயம்:

தமிழகத்தில் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வந்தாலும் இந்த வைரசால் இறப்போர் விகிதம் குறைவாகவே இருப்பதாக அமைச்சர் சுப்பிரமணியன் அண்மையில் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த,இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது மாநில சுகாதாரத்துறை அனைத்து தனியார் அலுவலகங்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, முகக்கவசம் அணியாத பணியாளர்களை அலுவலகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும், 2 பணியாளர்களுக்கு நடுவே 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தொற்று அறிகுறிகள் உள்ள பணியாளர்களுக்கு உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here