சும்மா தரமான சம்பவம்… அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு!!!

0

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமீபத்தில் தமிழக அரசு நடத்திய ஆய்வில்  நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளிகள் தற்போது மாணவர் சேர்க்கையும் நடத்திவந்துள்ளன. பின்னர் மாநிலத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தொடர்பான விவரங்களை சேகரித்து அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர், அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி அப்பள்ளியில் பயலும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால், சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலரே பொறுப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஜூன் 20க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here