கல்விக்கட்டணம் செலுத்த செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

0
Chennai_High_Court
Chennai_High_Court

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக் கட்டணத்தை செலுத்த அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கல்விக் கட்டணம் வசூலிக்க தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

கல்விக்கட்டண அவகாசம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆனால் இதன் மூலம் சில பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. ஊரடங்கால் உரிய வருமானம் இன்றி பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், கல்விக்கட்டணத்தை செலுத்த நிர்பந்திப்பது நியாயமற்றது என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் பள்ளிகள் சார்பில், கல்விக்கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மூன்று தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் பல பள்ளிகள் குறிப்பிடப்பட்ட அளவு கட்டணத்தை விட அதிகளவில் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததால் கல்விக்கட்டணம் வசூலிக்க தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

online class

இன்று வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் பள்ளிகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டதுடன், அத்தகைய பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here