
தமிழகத்தில் அரசு உத்தரவை மீறி கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
தனியார் பள்ளிகள்
தமிழகத்தில் இப்போது 10 ஆம், 11 ஆம், 12 ஆம் வகுப்பை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் நடைபெற்று முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை தொடர்ந்து மீண்டும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 2 ம் தேதி திறக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட போதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 23-24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அரசு அறிவித்த போதிலும் தனியார் பள்ளிகள் அதை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் அரசு விதிமுறையை மீறி பள்ளிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளனர். இப்படி தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.