வேலையில்லா “மகளிர்” கவனத்திற்கு.., மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்.., முழுவிபரம் உள்ளே!!

0
வேலையில்லா
வேலையில்லா "மகளிர்" கவனத்திற்கு.., மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்.., முழுவிபரம் உள்ளே!!

மதுரை மாவட்டத்தில் வேலை இல்லாமல் இருக்கும் மகளிர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம்:

தமிழகத்தில் பட்ட படிப்பை முடித்து வேலை இல்லாமல் தவிக்கும் மகளிர் மற்றும் இளைஞர்களுக்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு வேலைவாய்ப்பு முகாம்கள் வழக்கமாக நடத்தப்படும். அந்த வகையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூர் ஆலையில் இளநிலை தொழில் நிபுணர் பதவிக்கு சுமார் 1000 க்கும் மேற்பட்ட பெண்களை புதிதாக வேலைக்கு எடுக்க இருக்கிறார்கள்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., ரூ.1000 வழங்க தமிழக அரசு ஆலோசனை!!

ஆமாங்க, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் வருகிற நவம்பர் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக துணை இயக்குனர் கா. சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார். இந்த வேலைக்கு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த, அதாவது 2020, 2021,2022 கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற பெண்கள், வயது 18-20 வரை இருப்பவர்கள் மட்டும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த முகாமில் வேலைக்கு “select” ஆனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 15,000 சம்பளம் கொடுக்கப்படும் என்று டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள், தங்களது “12th certificate” ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் எடுத்து கொண்டு மதுரையில் உள்ள கோ. புதூர் பகுதியில் நடக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here