ரயில்வே ஏலத்தில் தனியார் நிறுவனம் எதுவும் கலந்து கொள்ளவில்லை – டெண்டரை மாற்றியமைக்க திட்டம்!!!

0
ரயில்வே ஏலத்தில் தனியார் நிறுவனம் எதுவும் கலந்து கொள்ளவில்லை - டெண்டரை மாற்றியமைக்க திட்டம்!!!
ரயில்வே ஏலத்தில் தனியார் நிறுவனம் எதுவும் கலந்து கொள்ளவில்லை - டெண்டரை மாற்றியமைக்க திட்டம்!!!

ரயில்களை தனியார் நிறுவனங்கள் இயக்குவதற்க்கு அழைத்த ஏலத்தில் எந்த ஒரு நிறுவனமும் பங்கேற்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் டெண்டரை ஒப்பந்த விதிமுறைகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

ஏலத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவில்லை…

இந்தியாவில் 12 மண்டலங்களில் 152 ரயில் ஜோடிகள் தனியாருடன் இணைந்து இயக்கும் திட்டம் ஜூலை 23 ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டது. இதைபோல் ரூ.7200 கோடி முதலீடு செய்து 29 ஜோடி ரயில்களை தனியார் நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது, . ஆனால் டெல்லி 1, டெல்லி 2, மும்பை 2 மண்டலங்களை மட்டுமே இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளது. மீதமுள்ள மற்ற மண்டலங்களை எடுத்து நடத்த எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை.

ஏலத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவில்லை...
ஏலத்தில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவில்லை…

தனியார் நிறுவனம் இயக்க முன்வராத மண்டலங்களில் சென்னையும் உள்ளது. சென்னை மண்டலத்தில் ரயில்வே மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து தாம்பரம் – மதுரை, சென்னை – லோக்மான்ய திலக் வாரம் இருமுறை ரயில், சென்னை – மங்களூரு, சென்னை – திருப்பதி வாராந்திர ரயில்கள் உள்பட 16 ரயில்களும் மற்றும் சென்னை – ஜெய்ப்பூர், சென்னை – ஹவுரா ஆகிய தொலைதூர ரயில்களை தனியார் நிறுவனத்துடன் இணைந்து இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த டெண்டர் ஏலத்தில் பங்கேற்கவில்லை. அதனால் ஒப்பந்த விதிமுறைகளை மற்றும் கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்து தனியார் நிறுவனம் ரயில்களை இயக்கும் வகையில் டெண்டர் மற்றம் இருக்கப்போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here