இரட்டை சதம் விளாசிய பிரித்வி ஷா.., “ஆனாலும் இந்திய அணியில் இடமில்லை” அவரே வெளியிட்ட உருக்க பதிவு!!

0
இரட்டை சதம் விளாசிய பிரித்வி ஷா..,
இரட்டை சதம் விளாசிய பிரித்வி ஷா.., "ஆனாலும் இந்திய அணியில் இடமில்லை" அவரே வெளியிட்ட உருக்க பதிவு!!

இங்கிலாந்து மற்றும் வேல்சில் முதல் தர கவுண்டி அணிகளுக்கு இடையே ஒரு நாள் உலக கோப்பை தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் பிரித்வி ஷா நார்தம்ப்டன் ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று சோமர்செட் அணிக்கு எதிராக விளையாடிய இவர், 153 பந்துகளில் 28 பவுண்டரிஸ் 11 சிக்ஸர்கள் உட்பட 244 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். இவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், சற்று உடல் பருமனான இவருக்கு இது ஏமாற்றமே தந்தது. நார்தம்ப்டன்ஷயர் அணிக்காக இரட்டை சதம் விளாசிய பின் இவர் இது குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இவர் கூறியதாவது, “நான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, காரணம் தெரியவில்லை. இந்திய தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. உடற்தகுதி ஒரு காரணமாக இருக்கலாம் என சிலர் கூறினார். இதனால், NCA தேர்வில் தேர்ச்சி பெற்றேன், மீண்டும் ரன்கள் எடுத்தேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் தொடர்ந்து ஏமாற்றமடைந்து வருகிறேன். ஆனாலும், என் ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பேன்” என்று கூறியுள்ளார்.

IND vs WI T20: தொடரை காப்பாற்ற இந்திய அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு…, வெஸ்ட் இண்டீஸ் இதற்கு வழி வகுக்குமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here