அமெரிக்க அதிபரை விட பிரதமர் மோடி பிரபலமான தலைவர் – இது 70% மக்களின் கருத்து!!

0

உலக நாடுகளின் தலைவர்கள் செல்வாக்கை ஆய்வு செய்த ஒரு தனியார் நிறுவனம், இந்தியாவின் பிரதமர் மோடி 70% மக்கள் விரும்பும் தலைவராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மோடி முன்னிலை:

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள தலைவர்கள் மக்கள் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கின் அடிப்படையில் பட்டியலாக தயாரித்து, ‘தி மார்னிங் கன்சல்ட்’ என்ற தனியார் நிறுவனம் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலில், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்  சார்ந்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தலைவர்களில் யாரிடத்தில் மக்களுக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்ற ஆய்வை நடத்தி அதன் முடிவை தற்போது அறிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார். மேலும், இந்த கணக்கெடுப்பில் சுமார் 70 சதவிகித மக்களின் செல்வாக்கு பெற்று,  மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார்.


இது மட்டுமல்லாமல், இவர் மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டோரை விடவும் பிரபலமான தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்தது.  இந்த நிலையில், இதன் அடுத்தடுத்த அதாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் பெற்றுள்ளனர்.   அவர்கள் மக்களிடம் 64% மற்றும் 63% என செல்வாக்கு பெற்றிருப்பது கவனிக்க தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here