பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை – துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!

0
பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை - துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!
பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை - துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!

நமது நாட்டின் பிரதமரும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தற்போது வரை மக்கள் சேவையாற்றி வருவதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்ய பேச்சு:

இந்தியாவின் மத்திய அரசு தேசிய கட்சியான பாஜகவின் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக நமது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் அல்லாத ஒருவர் பிரதமராக இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இந்த நிலையில், பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது.

பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை - துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!
பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை – துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!

அதில் குறிப்பிடத் தகுந்த வகையில், பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இந்த நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத் தகுந்தது. தற்போது உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா பிரதமர் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை - துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!
பிரதமருக்கும் முதல்வருக்கும் உள்ள ஒற்றுமை – துணை முதல்வரின் சுவாரஸ்ய பேச்சு!!!

அதாவது, நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றுள்ள இந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தினமும் மக்களுக்காக உழைத்து வருகிறார். இவரோடு சேர்த்து, நம் மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் அவர்களும் பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதல் இன்று வரை கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. இது இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை காட்டுவதாக சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்த இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here