ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற டாக்டர்கள் மறுப்பு சொல்ல முடியாது.., உயர்நீதிமன்றம் கண்டனம்!!

0
ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற டாக்டர்கள் மறுப்பு சொல்ல முடியாது.., உயர்நீதிமன்றம் கண்டனம்!!
ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற டாக்டர்கள் மறுப்பு சொல்ல முடியாது.., உயர்நீதிமன்றம் கண்டனம்!!

நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பை நிறைவு செய்த டாக்டர்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து அண்மையில் 19 முதுநிலை டாக்டர்கள் தங்களது தேர்வுக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நியமனம் வழங்கப்பட்டது. இப்படி தேர்வான டாக்டர்கள், “எங்களுக்கு போதிய வசதிகள் இங்கு கிடைப்பதில்லை. ஆதலால் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணி நியமனம் வழங்க வேண்டும்.” என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், “கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

சம்முவின் “சாகுந்தலம்” படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.., படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

இதனால் மருத்துவர்களின் மேற்படிப்புக்கான சலுகை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டுமே தவிர வசதி, வாய்ப்புகளை எதிர்பார்க்கக்கூடாது. மேலும் இதற்கான ஊதியமும் மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதால் இதுபோன்று வழக்கு தொடர்ந்து உங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here