3 கோல் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆக்ஸ்போர்டு…, கெத்து காட்டி வென்ற அர்செனல்!!

0
3 கோல் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆக்ஸ்போர்டு..., கெத்து காட்டி வென்ற அர்செனல்!!
3 கோல் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆக்ஸ்போர்டு..., கெத்து காட்டி வென்ற அர்செனல்!!

பிரீமியர் லீக் தொடரில், ஆக்ஸ்போர்டு யுனைடெட் அணியை பிரபலமான அர்செனல் அணி 3 கோல் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

அர்செனல்:

கத்தார் உலக கோப்பை தொடருக்கு பிறகு, இடை நிறுத்தப்பட்ட பிரீமியர் லீக் தொடர்கள் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த வகையில், பிரீமியர் லீக்கின் ஒரு பகுதியான FA கப் தொடரும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதில், மிகவும் பிரபலமான அர்செனல் அணியானது, ஆக்ஸ்போர்டு யுனைடெட் அணிக்கு எதிராக இன்று மோதியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் பாதி வரையிலும் இரு அணிகளும் ஒரு கோலுக்காக கடுமையாக போராடியே வந்தனர். ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், ஆரம்ப முதலே அர்செனல் அணி வீரர்கள் வேகம் காட்ட தொடங்கினர்.

ஐபிஎல்-லுக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வா?? ரோஹித் சர்மாவின் திடீர் முடிவு!!

இதன் மூலம், 63 வது நிமிடத்தில் அர்செனல் வீரர் முகமது எல்னேனி ஒரு கோல் அடித்தார். இதனை தொடர்ந்து, அசத்திய அர்செனல் வீரர் எடி என்கெடியா 70 வது மற்றும் 76 வது நிமிடத்தில் இரு கோல் அடித்து அதிரடி காட்டினார். இதனால், ஆட்ட நேர முடிவில், 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியானது அபாரமாக வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here