உலக கோப்பையை தொடர்ந்து களைகட்ட காத்திருக்கும் பிரீமியர் லீக்…, முக்கிய அப்டேட் வெளியிடு!!

0
உலக கோப்பையை தொடர்ந்து களைகட்ட காத்திருக்கும் பிரீமியர் லீக்..., முக்கிய அப்டேட் வெளியிடு!!
உலக கோப்பையை தொடர்ந்து களைகட்ட காத்திருக்கும் பிரீமியர் லீக்..., முக்கிய அப்டேட் வெளியிடு!!

உலக கோப்பை கால்பந்தை தொடர்ந்து, நட்சத்திர வீரர்கள் பலர் பங்கு பெரும் பிரீமியர் லீக் தொடரின் அடுத்த தொடர் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பிரிமியர் லீக்:

கால்பந்து ரசிகர்களிடையே அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வரும் 20ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 9ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

உலக கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் வகையில், பல்வேறு அணிகள், வெவ்வேறு லீக் தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இந்த வகையில், 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடும் பிரீமியர் லீக் தொடரானது கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த தொடரில் அனைத்து அணிகளும் 13, 14 போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில் அர்செனல் அணி 34 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

T20 WC: இறுதி போட்டிக்கு யார் வந்தாலும் சரி.,எங்க வியூகம் இதான்., உடைத்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்!!

உலக கோப்பை தொடர் காரணமாக இந்த தொடர் வரும் 13ம் தேதியுடன் நிறுத்தப்பட்டு அடுத்த மாதம் 26 ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. மேலும், இந்த சீசன் அடுத்த ஆண்டு மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 2023-2024 சீசன் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்த சீசன், ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 2024 மே மாதம் வரை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here