“கீழ விழுந்தாலும் மேசையில மண் ஒட்டல” – தோத்தாலும் என்னம்மா பேசுறீங்க.!

0
"கீழ விழுந்தாலும் மேசையில மண் ஒட்டல" - தோத்தாலும் என்னம்மா பேசுறீங்க.!

பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்றைய போட்டியில் கிறிஸ்டல் பிளேசஸ் மற்றும் ஆர்சனல் ஆகிய அணிகள் எதிரெதிரே பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் 3-0 என்ற கணக்கில் கிறிஸ்டல் ப்ளேசஸ் வெற்றி பெற்றது.

தோத்தாலும் என்னம்மா பேசுறீங்க:

நடைபெற்றுவரும் பிரீமியர் லீக் 2021 2022 கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியாக கிறிஸ்டல் பிளேசஸ் அணியும் ஆர்சனல் அணியும் மோதின. இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கு மட்டும் முக்கியமான போட்டி அல்ல. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியானது மற்ற அணிகளின் புள்ளி பட்டியலில் மாறுதல்களுக்கு உதவும் என்பதால் இந்த போட்டியின் வெற்றி தோல்வி அனைத்து அணிகளாலும் கவனிக்கப்பட்டது.

நேற்று நடந்த இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் துவக்கத்திலேயே கிறிஸ்டல் பிளேஸ் அணியினர் கோல்களை அடிக்கத் துவங்கினர். ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பிரேசில் அணியை சேர்ந்த வீரர் முதல் கோலை அடித்து அணியை ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். மீண்டும் ஆட்டத் தின் இருபத்தி நான்காவது நிமிடத்தில் கிறிஸ்டல் பிளேசஸ் அணியைச் சேர்ந்த ஜோர்டன் சிறப்பான கோல் அடித்து அணியை 2-0 என்ற கணக்கில் உயர்த்தினார்.

பிறகு ஆட்டத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பித்தது முதல் ஆர்சனல் அணி ஒரு கோல் கூட அடிக்க கிறிஸ்டல் பிளேசஸ் அணியினர் அனுமதிக்கவில்லை. இரண்டாம் பகுதியின் 64வது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்டல் பிளேசஸ் அணி சிறப்பான கோல் அடித்து அணியின் 3-0 என்று முன்னிலைப்படுத்தினர். ஆட்டத்தின் இறுதியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்சனல் அணி தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் ஆர்சனல் அணியை பற்றி ஆர்டெட்டா ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இவர்கள் தோல்வியை சந்தித்தாலும் முதல் நான்கு இடத்தை கட்டாயமாக பிடிப்பார் என்று நம்பிக்கை கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here