அமெரிக்காவிற்கு செல்ல தயாரான கர்ப்பிணி பெண் – ஆபத்தில் முடிந்த பயணம்!!!

0

டெக்சாஸில் 23 வயதான கர்ப்பிணி பெண் அமெரிக்காவிற்கு செல்வதற்காக எடுத்த முயற்சியில்; அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் உள்ள எஃகு சுவரில் சிக்கி கொண்டார்; அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்காவிற்கு செல்ல தயாரான கர்ப்பிணி பெண்:

புதன்கிழமை; மெக்ஸிகோவின் சியுடாட் ஜுரெஸில் ஹோண்டுரான் என்ற  18 அடி உயர சுவரில் ஒரு 23 வயதான கர்ப்பிணி பெண் ஏற  முயற்சித்தார். ஆனால்  எல் பாஸோவில் எல்லையின் பாதி சுவரில் ஏறிய அவரால்; யு.எஸ் நாட்டின் எல்லைக்குள் செல்ல முடியாமல் சுவரின் உச்சி பகுதியில் அமர்ந்ந்து விட்டார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திலுள்ள யு.எஸ். பார்டர் ரோந்து அதிகாரிகள்; எல் பாசோ தீயணைப்புத் துறையிடம் உதவி கோரினர். அங்கு வந்த தீயணைப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை காப்பாற்றி அங்குள்ள எல் பாசோ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு அந்த பெண்ணும், குழந்தையும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறப்பட்டது.

பின்னர்; சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த அந்தப் பெண், கைது செய்யப்பட்டு பின்னர் குற்ற எண்  42 இன் கீழ் மெக்சிகோவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தலைப்பு 42 கொள்கை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால்;  2020 மார்ச் 21 அன்று நடைமுறைக்கு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here