வித்தியாசமாக சுவையில் “இறால் கோலா உருண்டை” – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

வீக் எண்டு ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று இல்லத்தரசிகள் யோசித்து கொண்டு இருப்பர். இந்த பதிவில் மிகவும் வித்தியாசமான “இறால் கோலா உருண்டை” ரெசிபி குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • இறால் – 500 கிராம்
  • உப்பு – 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி – சிறிய அளவில்
  • பூண்டு – சிறிய அளவில்
  • பச்சை மிளகாய் – சிறிய அளவில்
  • வெங்காயம் – 1 (சிறியது)
  • முட்டை – 1
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • பிரட் தூள் – 1/4 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தமாக கழுவி அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி எடுத்து கொள்ளவும். பின், இறாலை எடுத்து அதில் உள்ள நரம்பினை எடுத்து கொள்ள வேண்டும். பின், அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதில் மிளகு தூள், முட்டை, சோள மாவு, பிரட் தூள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு இப்படி ஒரு அங்கீகாரமா?? வைரலாகும் வீடியோ!!

பின், இதனை நன்றாக கிண்டி விட்டு கொள்ள வேண்டும். பின், இந்த கலவையினை சிறு சிறு துண்டுகளாக எடுத்து கொள்ள வேண்டும். பின், அதனை பிரட் கிரம்ப்ஸ் கொண்டு பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு சட்டியில் எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் எடுத்து வைத்துள்ள பால்ஸை போட்டு பொறிக்க வேண்டும். பொன்னிறமாக வரும் வரை பொரித்து விட்டு அதனை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “இறால் கோலா உருண்டை” தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here