ருசியான “இறால் தொக்கு” ரெசிபி – வீட்டில் செஞ்சு அசத்துங்க!!

0

அசைவ பிரியர்களுக்கு கடல் உணவுகள் என்றால் மிகவும் பிரியம் தான். அந்த வகையில் ஈஸியான அதே சமயம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் “இறால் தொக்கு” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்…!

தேவையான பொருட்கள்

  • இறால் – 500 கிராம்
  • ஏலக்காய் – 2
  • பட்டை – 2
  • கிராம்பு – 2
  • பெரும்சீரகம் – 1 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 2
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில், இறாலை நன்றாக சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் முதலில், கிராம்பு, ஏலக்காய், பட்டை, பெரும் சீரகம் ஆகியவற்றை கலந்து கிண்டவும். நன்றாக இது வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை பார்த்து விட்டு அதில் எடுத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

இந்த கலவையை நன்றாக வதக்க வேண்டும். இது நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் ஆகியற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இந்த கலவையினை சிறிது நேரம் முடி வைத்து விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு, இதில் கடைசியாக இறாலை சேர்க்க வேண்டும். இறாலை சேர்த்ததும் அதில் உப்பு மற்றும் லேசாக தண்ணீர் விட்டு முடி வைத்து விட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பிறகு இதில் கருவேப்பில்லை சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். இதனை சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம். அவ்ளோ தான்!!

ருசியான “இறால் தொக்கு” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here