ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் ‘இறால் 65’ – சட்டுன்னு வீட்லயே செய்யலாம் வாங்க!!!

0

ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய உணவுகளில் இறாலை தான் முதல் இடத்தில் வைக்கணும்ங்க. நம்ம எப்போ ரெஸ்ட்டாரெண்ட் போனாலும் கட்டாயம் ஆர்டர் பண்ற ஒரு உணவு என்னனு பார்த்தோம்னா அது இறால் 65 தாங்க. ஆன வீட்ல செய்யும் போது ரெஸ்ட்டாரெண்ட்ல சாப்பிடுற அந்த சுவை நமக்கு கிடைக்கிறது இல்லைனு நிறையபேர் பொலம்புவாங்க.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த பொலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னா இந்த முறைல இறால் 65 செய்ஞ்சு பாருங்க. உங்க வீட்ல இருக்குற எல்லாரும் எந்த ரெஸ்ட்டாரெண்ட் ல வாங்குனனு கேப்பாங்க. அந்த அளவுக்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.

இறால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

இறாலில் சுத்தமாகவே கார்போஹைட்ரடீட் கிடையாது, அதிக அளவில் ப்ரோடீன் மற்றும் வைட்டமின் D உள்ளது. இறாலில் வயதான தோற்றத்தை தடுக்கும், சரும சுருக்கங்களை தடுக்கும் அஸ்டக்ஸாந்தின் அதிகமாக உள்ளது. கண் வலிக்கு நிவாரணியாகவும், பார்வை சிதைவிலிருந்தும் பாதுகாக்கிறது. தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. புற்றுநோயை எதிர்த்து போராடும் சத்துக்களை கொண்டது.

சுவையில் மட்டும் இல்லைங்க ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குவதால் உடல்நலத்தை வழங்குவதிலும் அது நம்பர் 1 தான். இப்போ ” ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைல் இறால் 65″ எப்படி செய்யலாம் னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

இறால் – 500gm

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

இறாலை ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

கறிவேப்பில்லை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:

முதலில் இறால் துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் தனியே வைத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கழுவி வைத்திருக்கும் இறால் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, இஞ்சி,பூண்டு விழுது, எலுமிச்சைசாறு, சோளமாவு, மல்லித்தழை, கறிவேப்பில்லை, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஒரு கடாயில் எண்ணையை காய வைத்து மிதமான சூட்டில் இறால் துண்டுகளை பொன்னிறம் ஆகும்வரை பொரித்து எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here