மோசடி வழக்கு: குடும்பத்துடன் விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரிவு தலைவர் – இருவர் உயிரிழப்பு!

0
மோசடி வழக்கு: குடும்பத்துடன் விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரிவு தலைவர் - இருவர் உயிரிழப்பு!

இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்தததில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரசன்ன சுவாமி:

கோவை மாவட்டத்தில் உள்ள செல்வபுரத்தில் ஜோதிடராகவும் மற்றும் ஜோதிடர் பிரிவு துணைத் தலைவராகவும் விளங்குபவர் தான் பிரசன்ன சுவாமிகள். அவர் ஜாதகம் பார்ப்பது, கஷ்டங்கள் குறைப்பதற்கு கயிறுகள் அளிப்பது மற்றும் தோஷம் கழிக்கும் பூஜை ஆகியவற்றை செய்து வருகிறார். இந்நிலையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் கருப்பையா. அவரது குடும்பத்திற்கு சொந்தமான இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருக்கிறது. இந்த இடம் தற்போது பிரச்சனையில் இருப்பதாக கவலைப்பட்டுள்ளார்.

இதனால் பிரசன்ன சுவாமியை அணுகியுள்ளார். அவர் இடம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியுள்ளார். அதை நம்பி கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ 25 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கருப்பையாக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி அவர் மனைவிடம் பூஜை செய்வதற்காக 15 பவுன் நகை வாங்கியுள்ளார் பிரசன்னா. இந்நிலையில் பண வங்கியும் தங்களுக்கு எந்த பிரச்சனையும் நீங்காததை அறிந்த கருப்பையா, மோசடி செய்ததாக பிரசன்னா மீது காவல்துறையில் வழக்கு தொடுத்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 3ம் தேதியன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் பிரசன்னா சுவாமிகள், அவரது மனைவி அஸ்வினி, தாயார் கிருஷ்ணகுமாரி மற்றும் மகள் ஆகிய 4 பேரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இந்நிலையில் தாயார் கிருஷ்ணகுமாரி மற்றும் பிரசன்னா சுவாமிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here