கத்தியை காட்டி மக்களை அச்சுறுத்திய பிரபல பிராங்க்ஸ்டர் – சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்த மர்ம நபர்!!

0
கத்தியை காட்டி மக்களை அச்சுறுத்திய பிரபல பிராங்க்ஸ்டர் - சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்த மர்ம நபர்!!
கத்தியை காட்டி மக்களை அச்சுறுத்திய பிரபல பிராங்க்ஸ்டர் - சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்த மர்ம நபர்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூபில் அதிகமானோர் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் மக்களை துன்புறுத்தி பயமுறுத்தும் விதமாக பிராங்க் செய்து வருகிறார்கள். மேலும் இது போன்ற சில பிராங்க் வீடியோக்கள் மக்களை சிரிக்க வைக்கும் விதமாக இருந்தாலும், பெரும்பாலான பிராங்க் வீடியோக்கள் மக்களை அச்சுறுத்தும் விதமாக இருந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் பொதுமக்கள் அனைவரும் அல்லோலப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிராங்க் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிராங்க்ஸ்டர் ராகுல். இவர் சமீபத்தில் எடுத்த ஷேர் ஆட்டோ பிராங்க் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அந்த ஆட்டோ பிராங்க் வீடியோவில் பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் விதமாக பிராங் செய்துள்ளார் ராகுல்.

வங்கி பயனர்களே கவனம்., வேலை நிறுத்தத்தால் 5 நாட்கள் முடங்கும் சேவைகள்! வெளியான ஷாக் நியூஸ்!!

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் அதிக அளவுக்கு ட்ரெண்ட் ஆனது. இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த ஒருவர் பிராங்க்ஸ்டர் ராகுலுக்கு எதிராக சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதாவது பிராங்க்ஸ்டர் ராகுல் பிராங்க் ஷோ என்ற பெயரில் பயங்கர ஆயுதத்தை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக புகார் கொடுத்துள்ளார். மேலும் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here