பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டம்.., இந்த தகுதி இருந்த போதும்…, வெளியான முக்கிய தகவல்!!

0

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பகவத் கரட் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன்படி இத்திட்டத்தின் கீழ் இதுவரைக்கும் 6.14 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கீழ் மூத்த குடிமக்கள் பலரும் பயனடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தவிர நாடு முழுவதும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் தான் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் மாநில வாரியாக இத்திட்டத்தின் கீழ் எத்தனை சதவீதம் பேர் பயனடைந்துள்ளனர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

அதன் படி அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 2.75%, ஆந்திரப் பிரதேசம் 4.14%, அருணாச்சல பிரதேசம் 1.59%, அசாம் 2.94%, பீகார் 1.07%, சண்டிகர் 7.27%, சத்தீஸ்கர் 4.30%, தாத்ரா & நகர் ஹவேலி 3.75%, டாமன் & டையூ 2.24%, டெல்லி 7.11%, கோவா 6.73%, குஜராத் 5.65%, ஹரியானா 4.41%, ஹிமாச்சல பிரதேசம் 7.43%, ஜம்மு & காஷ்மீர் 5.82%, ஜார்கண்ட் 4.39%, கர்நாடகா 7.41%, கேரளா 8.25%, லடாக் 3.08%, லட்சத்தீவு 2.54%, மத்திய பிரதேசம் 3.25%, மகாராஷ்டிரா 8.06%, மணிப்பூர் 1.44%, மேகாலயா 2.46%, மிசோரம் 1.67%, நாகாலாந்து 3.04%, ஒடிசா 3.98%, புதுச்சேரி 5.65%, பஞ்சாப் 3.85%, ராஜஸ்தான் 3.09%, சிக்கிம் 7.23%, தமிழ்நாடு 6.96%, தெலுங்கானா 6.78%, திரிபுரா 3.12%, உத்தரப்பிரதேசம் 4.25%, உத்தரகாண்ட் 4.07%, மேற்கு வங்காளம் 7.09% பேர் பயனடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here