
உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை ஒன்பது போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் அடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இந்த சீசனில் நடிகர் பிரதீப் ஆண்டனி தான் டைட்டிலை அடிப்பார் என ரசிகர்கள் பலரும் கூறி வந்த நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கமல் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் திரும்பி என்ட்ரி கொடுக்கும் நிலையில் பிரதீப் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது என்னை தேடி நான்கைந்து தயாரிப்பாளர்கள் கதை கேட்டு வருகின்றனர். எனவே அதற்கான கதையை ஆங்கில படத்தில் இருந்து காப்பி எடுக்க வெளிநாடு செல்கிறேன். விரைவில் நல்ல கதையோடு வருகிறேன். என்னை ஆள விடுங்க. நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு, போயிட்டு வரேன், நல்லா இருங்க’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரமாண்டமாக நடந்து முடிந்த ராதா மகளின் திருமணம்., வைரலாகும் புகைப்படங்கள்.,குவியும் வாழ்த்துக்கள்!!