கும்கி மாதிரியான கதையில் குக் வித் கோமாளி அஸ்வின் – ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா??

0

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடித்துள்ள படம்  விரைவில் ரிலீசாக உள்ளது.

விரைவில் ரிலீஸ்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு  வெளிவந்த திரைப்படம் கும்கி. காட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இதையடுத்து தற்போது வரை, இவர் படங்கள் எதுவும் குறிப்பிட்ட அளவு ரீச் ஆகவில்லை. தற்போது இவர் தனது மகன் சஞ்சய்யை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னதாக, குக் வித் கோமாளி அஸ்வின்  குமாரை வைத்து, ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார்.

காடு சார்ந்த படமாக அமைந்துள்ள இந்த படம், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஸ்வின் குமார், இயக்குனர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வந்தார். இதையடுத்து இந்த படம் அவருக்கு கை கொடுத்தால், அவர் மார்க்கெட் உயரும் என்பது அவருடைய ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here