விவேக், மயில்சாமி இறப்பு ரொம்பவே வேதனை தான்.., குமுறும் நயன்தாராவின் Ex!!

0
விவேக், மயில்சாமி இறப்பு ரொம்பவே வேதனை தான்.., குமுறும் நயன்தாராவின் Ex!!
விவேக், மயில்சாமி இறப்பு ரொம்பவே வேதனை தான்.., குமுறும் நயன்தாராவின் Ex!!

நடிகர் பிரபு தேவா மறைந்த விவேக் மற்றும் மயில்சாமி குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் பிரபு தேவா

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது முழு உடம்பையும் வளைத்து ஆடும் ஒரு நடன கலைஞன் என்றால் அது நடிகர் பிரபு தேவா தான். இவரின் ஆட்டத்தை பார்த்து உண்மையாகவே இவர் உடம்பில் எலும்பு இருக்கிறதா என்று ரசிகர்கள் சந்தேகம் பட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு தனது டான்ஸ் மூலம் மக்களை கவர்ந்து வைத்திருக்கிறார் பிரபு தேவா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற எல்லா மொழிகளில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து தற்போது இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் பாசத்துடன் அழைத்து வருகின்றனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொய்க்கால் குதிரை திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றது. தற்போது பகீரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கு.., முக்கிய குற்றவாளி தலைமறைவு!!!!!

இப்படத்தின் புரமோஷனுக்காக பிரபல சேனலில் பேட்டி அளித்தனர். அதில் பிரபு தேவா மற்றும் படத்தின் இயக்குனர் கலந்து கொண்டனர். அப்போது பிரபுதேவாவிடம் மறைந்த விவேக் மற்றும் மயில்சாமி குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, வருத்தம் இல்லாமல் எப்படி இருக்கும். அதிகமா இருக்கு, அவங்க ரெண்டு பேருமே சினிமாவிலும் ரியல் வாழ்க்கையிலும் நல்ல மனிதர்கள். அவர்கள் இப்ப நம்மோடு இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here