தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஓஹோன்னு இருந்த நடிகை தான் அனுஷ்கா. இவர் நடித்த அருந்ததி,பாகுபலி படங்கள் தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்டாக இருந்து வருகிறது. தற்போது எந்த பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் பாகுபலி படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் பிரபாஸை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து வந்தனர்.
வாட்ஸ்அப் பயனர்களே உஷார்.., இனி இந்த ஆப்ஷன் கிடையாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!
ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பது வெளியே வந்ததில், நடிகர் பிரபாஸ் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சூப்பர் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகர் பிரபாஸ் வீட்டில் அவர்களது காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. எனவே இந்த ஜோடிக்கு அடுத்த வருடம் கோலாகலமாக திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.