தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியிடங்களில் சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் டீசல் லாரிகளுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உத்திர பிரதேசம், ஹரியானாவிலும் உணரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பலரும் பீதியில் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இதன் மூலம் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் தகவல் வெளிவரவில்லை. இருந்தாலும் இந்த சூழ்நிலையால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.