
தமிழகத்தில் 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் முதல் துவங்க உள்ளதால் தேர்வு மைய பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேர்வு காலங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என அண்மையில் மின்வாரிய துறைக்கு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை மனு அளித்து இருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது இதனை பரிசீலனை செய்த மின்வாரியத்துறை சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு காலங்களில் அத்தியாவசிய பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
DA உயர்வு கோரி ஊழியர்கள் ஸ்டிரைக்., அரசின் உத்தரவை மீறி தொடரும் போராட்டத்தால் மக்கள் கலக்கம்!!
இதனால் அனைத்துவிதமான முன்னேற்பாடுகளையும் பொதுத்தேர்வு காலங்களுக்கு முன்னதாக தயார் செய்து தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய துறை தெரிவித்துள்ளது. அரசன் இந்த சூப்பர் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.