தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனால் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) சென்னையில் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளை பற்றி பார்ப்போம்.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் விபத்துகளை தவிர்க்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் மாதந்தோறும் முறையாக சரி செய்யப்பட்டு வருகிறது. ஆதலால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணை மின் நிலையங்களில் மின் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் சென்னையில் சில முக்கிய இடங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை மறுநாள் இந்த துணை மின் நிலையத்தால் மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான, பெரம்பூர் பகுதியில் உள்ள சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா சாலை, டீச்சர்ஸ் காலனி, வில்லிவாக்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் பொன்னேரி பகுதியில் உள்ள கண்ணன் கோட்டை, சின்ன புலியூர், பெரிய புலியூர், சிறுவாடா மற்றும் என்.எம்.கண்டிகை, தேர்வாய் கண்டிகை, கரடிபுதுர், ஜி.ஆர் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தாம்பரம் பகுதியில் உள்ள சூராத்தம்மன் கோவில் தெரு, அர்ச்சனா நகர், மணிமேகலை தெரு, வளையாபதி தெரு ஸ்ரீராம் காந்தி ரோடு, முடிச்சூர் காமராஜர் நெடுஞ்சாலை, புதிய பெருங்களத்தூர், கஜபுஜெந்தர் நகர், சித்ரா அவென்யூ, எம்.கே.பி நகர், எஸ்.வி.ராகவன் ரோடு வண்டலூர் கலைஞர் நெடுஞ்சாலை – 1 முதல் 7வது தெரு, சேகர் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குண்டு மேடு குறிஞ்சி நகர் செல்வ விநாயகர் கோவில் தெரு, சீனிவாசா நகர், ஜவஹர்லால் தெரு, புத்தர் நகர், சத்தியமூர்த்தி ரோடு, ராஜாமணி தெரு, மணிமேகலை தெரு, அண்ணா தெரு, காமராஜர் நகர், பீர்க்கன்கரணை பெருங்களத்தூர் காந்தி தெரு உள்ளிட்ட இடங்களிலும் நாளை மறுநாள் சனிக்கிழமை அன்று மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் அண்ணா சாலை பகுதியில் இருக்கும் பகுதிகளான லாசர் சர்ச் தெரு, உலகப்பா தெரு வெங்கடேச கிராமணி தெரு, புது பங்களா, நாகமணி தெரு, ECR சாலை, ஐயா சாமி தெரு, டிப்போ சந்து, ஹரிஸ் சாலை, எழும்பூர் நீதிமன்றம், முனியப்பிள்ளை தெரு உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் வழக்கம் போல் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here