தமிழகத்தில் “இந்த பகுதிகளில்” நாளை (செப்.,23) பவர்கட்.,, உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!

0
தமிழகத்தில் "இந்த பகுதிகளில்" நாளை (செப்.,23) பவர்கட்.,, உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!

தமிழகத்தில் ராஜபாளையம் கோட்டத்தில், ரெட்டியபட்டி உப மின்நிலையத்தில் நாளை(23-09-2022) நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழக அரசு தற்போது, மின்வாரிய துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மின் வாரியம் சார்பில் மாதந்தோறும், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏனென்றால், இதை சரி செய்தால் தான், சீரான மின் விநியோகம் இருக்கும், அடிக்கடி மின்தடையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும் மற்றும் மக்கள் பாதுகாப்பிற்காகவும் ஒரு சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்.மேலும் இந்த மின்தடை குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும்.அன்றைய தினம் பொது மக்களுக்கு மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கப்படும்.

மதுரை விமான நிலைய பார்க்கிங்கில் நடக்கும் கொள்ளை.., பயணிகளிடம் கல்லா கட்டும் நிர்வாகம்!

இந்த வகையில் நாளை (20.09.2022) மின் பராமரிப்பு பணி காரணமாக ராஜபாளையத்தில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், ராஜபாளையம் கோட்டத்தில், ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், “பேயம்பட்டி, குறிச்சியார்பட்டி, சத்திரப்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், அய்யனாபுரம், சங்கம்பட்டி,சங்கரபாண்டியாபுரம், ஆப்பனூர், ஆப்பனூர், ராமச்சந்திராபுரம், அழகாபுரி, வடகரை, கோபாலபுரம், சத்திரப்பட்டி,வடமலாபுரம், கீழராஜகுலராமன், கன்னித்தேவன்பட்டி, அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், ஊஞ்சம்பட்டி” ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here