
தமிழக மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஊழியர்கள் பண்டிகை நாட்களின் போது கூட மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தமிழக அரசு மின்விநியோகம் செய்து வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு மின் நுகர்வு 30 கோடி யூனிட்டுகளாக உள்ளது.
இந்நிலையில் இது பண்டிகை நாட்களின் போது குறைந்துள்ளதாக தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையினால் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்போர் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால் கடந்த 10 ஆம் தேதி அன்று 30.80 கோடி யூனிட்டுகளும், 11ஆம் தேதி 27.26 கோடி யூனிட்களாக இருந்தது. ஆனால் தீபாவளி தினத்தன்று மின் நுகர்வு மிகவும் குறைந்து 21.73 கோடி யூனிட் களாக சரிவடைந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சற்று அதிகம் தான் என்று சொல்கின்றனர்.