சரவணா ஸ்டோர்ஸை தொடர்ந்து மூடப்படும் போத்தீஸ் – மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!!

0

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கடை மூடல் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய  ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வணிக வளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு  மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது. இதனை அடுத்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 30 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் அந்த கடையை மூடுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல் தற்போது, குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தில், 240 ஊழியர்களிடம் பரிசோதனை செய்ததில், 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த கடையை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஒரே இடத்தில் உள்ள 2 பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டுள்ள  சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here