தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் உட்பட அனைத்து இடங்களிலும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. மேலும் இன்று கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் அனைத்தும் எந்த தேதியில் நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப் படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.