லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம் – காரணம் இதுதான்!!

0

இந்தியாவில் பாலியல் சம்பந்தமான வெப்சைட்களை பார்ப்பதற்கு கடந்த 2018 ல் அரசு தடை விதித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. எனினும் அவற்றிற்கான தடை இன்று வரை தொடர்கிறது. பாலியல் வீடீயோக்களை அதிகளவில் பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. பல்வேறு சமூக பாலியல் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டும், சிறுகுழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆபாச வீடியோக்கள் பல கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்பது நமக்கு நன்றாக தெரியும். எனவே அரசு அத்தடையை விதித்தது. உலக அளவில் பாலியல் தளங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த போர்ன் ஹப் உட்பட 827 வெப்சைட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில் போர்ன் ஹப் அதன் வெப்சைட்டில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான ஆபாச வீடீயோக்களை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.

மேலும் YOU TUBE போல யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்யலாம் என்ற நிலை மாறி இப்போது சரியாக அடையாளம் காணப்பட்ட பயனாளர்கள் (VERIFIED USERS) மட்டுமே வீடீயோக்களை அப்லோட் செய்ய முடியும் என்ற விதிகளை செயல்படுத்தியுள்ளது. மேலும் அந்த தளத்திலிருந்து இனி வீடியோக்களை டவுன்லோட் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

உள்ளாடை தெரிய முன்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த்!!

நியூயார்க் டைம்ஸின் குற்றச்சாட்டின் பிறகு போர்ன் ஹப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. அது தனது அறிக்கையில், எங்கள் தளத்தில் இருந்த 13.5 மில்லியன் வீடீயோக்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் அழிக்கப்பட்டு தற்போது 2.9 மில்லியன் வீடியோக்கள் மட்டுமே உள்ளன.

அவையும் VERIFIED USER களால் பதிவேற்றப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தளத்தில் பண பரிவர்த்தனைக்கு உபயோகப்படுத்தப்பட்ட மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்டு ஆகியவை தடை செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here