‘முணுமுணுக்குற முத்தம்மா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ‘சன் டிவி’ நடிகை – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் நடிகை பூவரசி முணுமுணுக்குற முத்தம்மா பாடலுக்கு சக நடிகர்களுடன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக

சன் டிவியில் பூவே உனக்காக சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதையில் கதிர் நல்லவரா?? கெட்டவரா?? யாராலும் யூகிக்கமுடியவில்லை. கதிரின் அம்மாவும் பூவரசி குடும்பத்தை பழிவாங்க இப்படி இறங்குவார் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. பூவரசியின் அம்மாவும் தற்கொலை செய்துக்கொண்டார்.

அடுத்து பூவரசியின் நிலைமை என்ன ஆகுமோ என்ற பலரும் ஆவலுடன் சீரியலை பார்த்து வருகின்றனர். பூவரசி அம்மா இறந்ததற்கு கதிர் காரணமாக இருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்து வருகிறது.

இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் பூவரசிக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்து வருகிறது. கதையின் ட்ராக் பாரதி கண்ணம்மா போல ஆகி விடுமோ என்று பலரும் கவலையில் இருந்தனர்.

ஆனாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாயகியாக நடிக்கும் ராதிகா முணுமுணுக்குற முத்தம்மா பாடலுக்கு சக நடிகருடன் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here