சன் டிவியில் முத்திரை பதித்த பூவே உனக்காக – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் பூவரசியை கொலை செய்ய பல திட்டங்களை போட்டு வருகிறார் மகேஸ்வரி. இவரின் திட்டங்களை முறியடிக்க கதிர் போராடி வருகிறார். மகேஸ்வரிக்கு அவரது தம்பி பக்கபலமாக இருக்க எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளார் கதிர். இப்படி சீரியல் பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல்லுக்கு ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் அனைவருமே புது முகம் என்பதாலும் சீரியல் நல்ல ரீச்சானது. இந்த சீரியல் நட்பு, காதல் என அனைத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் தான் இந்த அளவிற்கு பிரபலம் ஆனது.

ஆனால் சீரியல் ஆரம்பித்த சில மாதங்களில் ஒவ்வொருவராக சீரியலை விட்டு விலக ஆரம்பித்தனர். முதலில் கீர்த்தி இந்த சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு கதிரும் இந்த சீரியலை விட்டு விலகினார். இப்பொழுது பூவரசி மட்டும் தான் இந்த சீரியலில் நிலையாக நடித்து வருகிறார்.

கதிர் கதாபாத்திரத்தில் அசிம் நடித்து வருகிறார். இப்படி இருக்க தற்போது பூவே உனக்காக சீரியல் 300 எபிசோடுகள் கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனால் அந்த சீரியலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here