சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நாயகியாக நடிக்கும் பூவரசி தற்போது குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பூவே உனக்காக நாயகி
சன் டிவியில் தற்போது பிரபலமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் முக்கியமாக பூவே உனக்காக சீரியல் தான் டாப் ஹிட். பூவரசி மற்றும் கதிருக்காக தான் இந்த சீரியல் பிரபலமாகி வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் பூவராசியின் உண்மை பெயர் ராதிகா ப்ரீத்தி.
கர்நாடக பெண்ணான இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. அதிலும் கதிர் பூவரசிக்கும் தற்போது அன்யோன்யம் அதிகரித்து வருகிறது.
இந்த சீரியலில் பூவரசியை பிடித்ததற்கு காரணமே அவரின் அந்த அடக்க ஒடுக்கமான குடும்ப பாங்கான பெண்ணாக இருப்பது தான். இந்நிலையில் அவர் நிஜ வாழ்க்கையில் ஒரு மாடர்ன் ஆன பெண். அவரது இன்ஸ்டா பக்கத்தில் எல்லாம் பல ரீலிஸ் செய்த விடியோவை எல்லாம் பதிவிட்டுள்ளார்.
தற்போது அவர் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு தனது ஆண் நண்பருடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர். இந்த குடும்ப குத்துவிளக்கு பண்ற காரியமா இது என அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.