தங்க பதக்கம் வென்ற வீராங்கனைக்கு தடை.., ஊக்கமருந்து பிரச்சனையால் ஏற்பட்ட சலசலப்பு!!

0
தங்க பதக்கம் வென்ற வீராங்கனைக்கு தடை.., ஊக்கமருந்து பிரச்சனையால் ஏற்பட்ட சலசலப்பு!!

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை எம் ஆர் பூவம்மா, ஊக்கமருந்து பயன்படுத்தியதால் தடகள போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடகள வீராங்கனை

பாட்டியாலாவில் கடந்த ஆண்டு நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை பூவம்மா கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து பூவம்மாவுக்கு NADA (தேசிய ஊக்கமருந்துக்கு எதிரான அமைப்பு) சார்பில் ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த பரிசோதனையில் பூவம்மா, மெதில்ஹெக்சாமைன் என்ற மருந்துப் பொருள் கலந்த ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக தெரியவந்தது. இதனால் அவருக்கு 3 மாதங்கள் தடகள போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்க கோரி ஊக்கமருந்து தடுப்பு பிரிவுக்கு பூவம்மா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த அபினவ் பானர்ஜி, 3 மாதங்கள் விதித்த தடையை நீக்கி 2 ஆண்டுகள் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை.,அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

இதனால் பூவம்மா 2 ஆண்டுகள் எந்த தடகள போட்டியிலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், கலப்பு இரட்டை தொடர் ஓட்டப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்ட தொடர் ஓட்டத்திற்காக தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here