
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் பார்ட் 2 படத்தின் 1st சிங்கிள் சாங் குறித்து படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் பார்ட் 2:
இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி வசூலிலும் அசுர தாண்டவம் போட்டது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் பார்ட் 2 படத்தின் 1st சிங்கிள் சாங் குறித்து படக்குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, பொன்னியின் செல்வன் பார்ட் 2வில் இடம்பெற்றுள்ள “அக நக” பாடல் வருகிற மார்ச் மாதம் 20ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.
தற்போது அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த பாடலில் AR ரகுமான் பாடியிருப்பாரா? என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாட்டிற்காக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.