மீண்டும் ஒரே மேடையில் ரஜினி கமல்., பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச் தேதி வெளியீடு!!

0
மீண்டும் ஒரே மேடையில் ரஜினி கமல்., பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச் தேதி வெளியீடு!!
மீண்டும் ஒரே மேடையில் ரஜினி கமல்., பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச் தேதி வெளியீடு!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பார்ட் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் செய்து காட்டியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது ஒட்டுமொத்த உலகமே இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே போட்டோ தான்., தங்கலான் பட ஹைப்பை எகிற செய்த பட குழு! என்னன்னு நீங்களே பாருங்க!!

அதாவது பொன்னியின் செல்வன் பார்ட் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனும் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் என்ன பேச போகிறார்கள் என்று ரசிகர்கள் இப்பவே எதிர்பார்ப்பை தொடங்கிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here