அடேங்கப்பா.. இது லிஸ்ட்லயே இல்லயே – பொன்னியின் செல்வன் ட்ரைலரை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்!

0
ரீலீசுக்கு முன்பே மொத்தத்தையும் தூக்கிய பொன்னியின் செல்வன் - தமிழ் சினிமாவில் நடக்காத சாதனை!!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புனிதத்தை தழுவி இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா,ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 8-ம் தேதி நடந்த டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட்டார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் பட ட்ரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, வரும் செப்டம்பர் 6-ந் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும், அதுமட்டுமின்றி அன்றைய நிகழ்ச்சியின் போது பொன்னியின் செல்வன் பட டிரைலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here