கல்லா கட்டிய பொன்னியின் செல்வன்.., ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே இவளோ கோடி வசூலா??

0

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பல கோடி கொடுத்து சன் டிவி நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடித்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. தற்போது பட புரொமோஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ. 25 கோடிக்கு சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. அதேபோல் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 100 கோடி அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே கோடி கணக்கில் வசூலை அள்ளி உள்ளதால் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here