ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த பொன்னியின் செல்வன் – தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம்!!

0
ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த பொன்னியின் செல்வன் - தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம்!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்பே எந்த ஒரு தமிழ் படமும்  இதுவரை படைத்திடாத சாதனையை படைத்துள்ளது.

பொன்னியின் செல்வன் சாதனை:

வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம், 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, சென்னையில் வருகிற 6-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான கோலாகல ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதாவது படத்தின், ஓடிடி உரிமையை ரூ.120 கோடி கொடுத்து அமேசான் நிறுவனம், கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும், இவ்வளவு கோடிக்கு விற்பனை ஆகவில்லை என்றும், பொன்னியின் செல்வன் திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து விட்டதாகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here