பொன்னியின் செல்வன் பட ரிலீஸுல் சிக்கல்.., தியேட்டரில் வெடிக்க போகும் கலவரம்! அதிர்ச்சியில் படக்குழு!!

0
பொன்னியின் செல்வன் பட ரிலீஸுல் சிக்கல்.., தியேட்டரில் வெடிக்க போகும் கலவரம்! அதிர்ச்சியில் படக்குழு!!

நாளை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு புதிதாக ஒரு ஆபத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன்:

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸுக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படம் நாளை வெளியாகும் நிலையில் தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புது ஆபத்து ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது திரைக்கு வரும் படத்தை தயாரிப்பாளர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் வாங்கி தியேட்டர்களில் வெளியீடு செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில் கனடாவில் புதிதாக ஒரு வினியோகஸ்தர் 1 கோடியே 75 லட்சம் கொடுத்து இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், பழைய வினியோகஸ்தர்கள் பிரச்சனை செய்து வருகிறார்களாம்.

பாவம்யா நெல்சன்.., எல்லாமே நாசமா போச்சு., என்ன பண்ணாலும் இதை தடுக்க முடில – ஆக்ரோஷத்தில் படக்குழு!!

இதே சம்பவம் நடிகர் விஜயின் தெறி, புலி போன்ற படங்களில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வெளியான சியான் பட ரிலீஸின் போது கூட, தியேட்டர் ஸ்கிரினை கிழித்து பிரச்சனை செய்தனர். இதனால், தங்கள் படத்திற்கும் இந்த பிரச்சனை வருமோ? என்ற அதிர்ச்சியில் படக்குழுவினர் இருந்து வருகின்றனர். நாளை படம் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது படத்திற்கு வந்துள்ள புது சிக்கல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here