பொன்னியின் செல்வன் படத்திற்காக பெயரையே மாற்றிய பிரபலங்கள் – அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிரடி!!

0

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக, அந்தப் படத்தில் நடித்த பிரபலங்கள் தங்கள் பெயரையே மாற்றி, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

பிரபலங்கள் அதிரடி:

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர் என அனைத்துமே வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக உள்ளது.

படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் பட குழு தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த வகையில், படத்தில் ஆதித்ய கரிகாலன் மற்றும் குந்தவை நாச்சியாராக நடித்துள்ள விக்ரம் மற்றும் திரிஷா ஆகிய பிரபலங்கள் தங்களின் பெயரை, அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக மாற்றி உள்ளனர்.

படத்திற்காக தங்கள் கதாபாத்திரங்களின் பெயரையே, தற்போது தங்களின் பெயராக வைத்துள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள், இதையெல்லாம் பார்க்கும் போது தான் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here