அதிரடியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மாஸ் அப்டேட் – வைரலாகும் வீடியோ!!

0
அதிரடியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மாஸ் அப்டேட் - வைரலாகும் வீடியோ!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகியுள்ள வரலாற்று படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெருமைகளை சொல்லும் 16 நொடி வீடியோவை படக்குழு அதிரடியாக வெளியிட்டுள்ளது.

அதிரடி வீடியோ:

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான, பொன்னியின் செல்வன் என்ற கதையை படமாக எடுக்க இயக்குனர் மணிரத்தினம்  திட்டமிட்டார். இதையடுத்து, இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள படத்தின்  ஷூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.

படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரபு, அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் முதல் பாகம் வருட செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏ ஆர் ரகுமான் பின்னனி இசையில், சோழர்கள் வருகிறார்கள் என்ற வாசகம் அடங்கிய  16 நொடி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பயங்கரமாக டிரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின், டீசர், ஆடியோ லான்ச் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here