பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு பட இசை குறித்து புதிய முடிவு – ஏ.ஆர். ரகுமான் அதிரடி!!

0
பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு பட இசை குறித்து புதிய முடிவு - ஏ.ஆர். ரகுமான் அதிரடி!!
பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு பட இசை குறித்து புதிய முடிவு - ஏ.ஆர். ரகுமான் அதிரடி!!

இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படத்தின் பின்னணி இசை குறித்து ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளார்.

பின்னணி இசை:

தென்னிந்திய சினிமாவில் ஆஸ்கர் நாயகன் என்று பாசத்தோடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் இசை புயல் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் இந்த ஆண்டில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, கோப்ரா, இரவின் நிழல் என நான்கு படங்கள் வெளியாகியது. இதில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 450 கோடி வசூலும், வெந்து தணிந்தது காடு 75 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இந்த படங்கள் வெற்றியடைய ஏ.ஆர். ரகுமான் இசையும் ஒரு காரணம் என்று பலரால் பேசப்பட்டது. மேலும், இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற பின்னணி இசை அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது என்றால் அது மிகையாகாது.

பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவின் இரண்டாவது கணவர் இவர் தான்.., புகைப்படம் உள்ளே!!

இந்நிலையில் இப்படங்களின் பின்னணி இசை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது ஆகிய படங்களின் பின்னணி இசையும் மற்றும் தான் தயாரித்த “99 சாங்ஸ்” படத்தின் இசையும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என ஏ.ஆர். ரகுமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here